தினம் ஒரு அகவல் 616
கடல்களு மலைகளுங் கதிகளு நதிகளும்
அடலுற வகுத்த வருட்பெருஞ் ஜோதி – 616
கடல்களும் மலைகளும் கதிகளும் நதிகளும்
அடலுற வகுத்த அருட்பெருஞ்ஜோதி !
கடல்களையும், மலைகளையும், வீசுகின்ற காற்றினையும், ஓடுகின்ற நதிகளையும் வலிமையோடு விளங்குமாறு அமைத்த அருட்பெருஞ்ஜோதி!