News
MARCH 2026
தினம் ஒரு அகவல் 64
64. ஓதியோ தாம லுறவெனக் களித்த
ஆதியீ றில்லா வருட்பெருஞ் ஜோதி
ஓதி ஓதாமல் உறவு எனக்கு அளித்த
ஆதி ஈறு இல்லா அருட்பெருஞ்ஜோதி !
ஆதி – தொடக்கம் ஈறு – முடிவு
எந்தவொரு உபதேசமும் இல்லாமலும், நான் எந்தவொரு நூலையும் படிக்காமலும், நேரடியாக தன்னையே உறவாகவும் (ஞானமாகவும்) எனக்கு அளித்து, தொடக்கம் மற்றும் முடிவுகள் எதுவும் இல்லாத நிலையில் என்றும் நிலைத்திருக்கும் அருட்பெருஞ்ஜோதியே!


