News
MARCH 2026
தினம் ஒரு அகவல் 67
67. திவளுற் றவண்டத் திரளினெங் கெங்கும்
அவளுக் கவளா மருட்பெருஞ் ஜோதி
திவளுற்ற அண்டத் திரளின் எங்கெங்கும்
அவளுக்கு அவளாம் அருட்பெருஞ்ஜோதி !
திவள் – ஒளி அண்டத்திரள்கள் – கோள்கள்
ஒளி வீசிக்கொண்டு இருக்கின்ற பிரபஞ்சத்தில் உள்ள அனைத்துப் பொருள்களிலும், வாலை தேவியின் சக்திக்கும் மூலமாகவும் இருந்து விளங்குகின்ற அருட்பெருஞ்ஜோதியே!


