News
MARCH 2026
தினம் ஒரு அகவல் 71
71. எப்பொருள் மெய்ப்பொரு ளென்பர்மெய் கண்டோர்
அப்பொரு ளாகிய அருட்பெருஞ் ஜோதி
எப்பொருள் மெய்ப்பொருள் என்பர் மெய் கண்டோர்
அப்பொருளாகிய அருட்பெருஞ்ஜோதி !
உண்மைப் பொருளைக் கண்ட ஞானிகள், உலகில் உள்ள எல்லாப் பொருள்களுக்கும் ஆதாரமாக விளங்கும் எந்தப் பரம்பொருளை ‘மெய்ப்பொருள்’ என்று வரையறுத்துக் கூறுவார்களோ, அந்த உண்மைப் பொருளாகி விளங்குகின்ற அருட்பெருஞ்ஜோதியே!


