News
MARCH 2026
தினம் ஒரு அகவல் 74
74. சத்திக ளெல்லாந் தழைக்கவெங் கெங்கும்
அத்தகை விளங்கு மருட்பெருஞ் ஜோதி
சத்திகள் எல்லாம் தழைக்க எங்கெங்கும்
அத்தகை விளங்கும் அருட்பெருஞ்ஜோதி !
பிரபஞ்சத்தை இயக்கும் அனைத்து சக்தி வடிவங்களும் ஆக்கம் பெறவும், செழிக்கவும் உதவுவதற்காக, எல்லா இடங்களிலும் நீக்கமற நிறைந்து நின்று, அந்தப் பிரபஞ்ச ஆற்றலாகவே விளங்குகின்ற அருட்பெருஞ்ஜோதியே!


