News
APRIL 2026
தினம் ஒரு அகவல் 86
86. சகமுதற் புறப்புறந் தங்கிய வகப்புறம்
அகம்புற முற்றுமா மருட்பெருஞ் ஜோதி
சகம் முதல் புறப்புறம் தங்கிய அகப்புறம்
அகம் புறம் முற்றுமாம் அருட்பெருஞ்ஜோதி !
அருட்பெருஞ்ஜோதியானது உலகப் பொருட்களாகிய வெளியிலும் (புறப்புறம்), அந்தப் பொருட்களின் இயக்கத்திற்குக் காரணமாக உள்ளே தங்கியிருக்கும் உயிராகவும் (அகப்புறம்), உடல் மற்றும் உயிர் ஆகிய இரண்டிலும் (அகம்புறம்) முழுமையாக நிறைந்து, எல்லாமாகவும் விளங்குகிறது என்பதை உணர்த்துகிறது.


