News
APRIL 2026
தினம் ஒரு அகவல் 89
89. மந்தண மிதுவென மறுவிலா மதியால்
அந்தணர் வழுத்து மருட்பெருஞ் ஜோதி
மந்தணம் இதுவென மறுவிலா மதியால்
அந்தணர் வழுத்தும் அருட்பெருஞ்ஜோதி !
மந்தணம் – மறைபொருள் மறு – குற்றம்
அந்தணர் – ஞானம் பெற்றவர்
அனைத்துக்கும் மூலமான மெய்ப்பொருள் அல்லது இரகசியம் என்பதை உணர்ந்து, குற்றம் நீங்கிய, களங்கமற்ற தூய அறிவைக் கொண்டுள்ள ஞானிகளால் போற்றித் துதிக்கப்படும் பேரொளி அருட்பெருஞ்ஜோதி ஆகும்.


