News
APRIL 2026
தினம் ஒரு அகவல் 92
92. துன்பறுத் தொருசிவ துரிய சுகந்தனை
அன்பருக் கேதரு மருட்பெருஞ் ஜோதி
துன்பு அறுத்து ஒரு சிவ துரிய சுகந்தனை
அன்பருக்கே தரும் அருட்பெருஞ்ஜோதி !
துரிய சுகம் – நான்காம் நிலை (விழிப்பு, தூக்கம், சொப்பனம் கடந்த ஞான நிலை)
உயிர்களின் துன்பங்களை முற்றிலுமாக நீக்கி, ஒப்பற்ற சிவத்தின் துரிய நிலையால் கிடைக்கும் பேரின்பத்தை, அன்பு நெறியில் உள்ள அடியார்களுக்கு மட்டுமே வழங்குகின்ற அருட்பெருஞ்ஜோதியே!


