News
APRIL 2026
தினம் ஒரு அகவல் 94
94. சேதனப் பெருநிலை திகழ்தரு மொருபரை
யாதனத் தோங்கிய வருட்பெருஞ் ஜோதி
சேதனப் பெருநிலை திகழ் தரும் ஒரு பரை
ஆதனத்து ஓங்கிய அருட்பெருஞ்ஜோதி !
சேதனம் – உணர்வுள்ள ஞான நிலை
பரை ஆதனம் – சக்தி இருப்பிடம்
உணர்வுள்ள எல்லாப் பொருள்களிலும் (சேதனம்) உள்ள மிக உயர்ந்த ஞான நிலையில் பிரகாசிக்கின்ற ஒப்பற்ற பராசக்தியின் இருப்பிடத்தில் உயர்ந்து வீற்றிருக்கும் அருட்பெருஞ்ஜோதியே!


