News
APRIL 2026
தினம் ஒரு அகவல் 95
95. ஓமயத் திருவுரு வுவப்புட னளித்தெனக்
காமயத் தடைதவி ரருட்பெருஞ் ஜோதி
ஓமயத் திரு உரு உவப்புடன் அளித்து எனக்கு
ஆமயத் தடை தவிர் அருட்பெருஞ்ஜோதி !
ஓம் – பிரணவ மந்திரம்
ஓமயம் – பிரணவத் தேகம்
ஆமயம் – பாசப்பிணைப்பு
ஓம் என்னும் பிரணவத்தின் வடிவமே ஆன ஒளித் திருமேனியை (தேகத்தை) எனக்கு மகிழ்ச்சியுடன் (உவப்புடன்) வழங்கி, பாசப் பிணைப்பால் வரும் தடைகள் அனைத்தையும் நீக்கிய அருட்பெருஞ்ஜோதியே!


