News
NOVEMBER 2023
 
          குரு உபதேசம் – 3879
முருகப்பெருமானை வணங்கி பூஜித்து ஆசி பெற்றிட்டால்… முருகா என்றால், சைவ உணவில் நம்பிக்கை வரச்செய்தும், அன்னதானம் செய்வதில் ஆர்வமும், அதற்கு தேவையான பொருளுதவிகளை செய்தும், மேன்மேலும் புண்ணியத்தைப் பெருகிடச் செய்தும், காமதேகத்தின் பலகீனங்களை உணரச் செய்து மெல்லமெல்ல, அவசரப்படாமல் மென்மையான ஒரு வேதியியல் செய்து, காமதேகத்தை நீங்கச் செய்து ஒளி உடம்பை பெறச் செய்து, என்றும் அழிவில்லாத வாய்ப்பை தருவான் முருகப்பெருமான். ஞானத்தலைவனும், ஞானிகள் தலைவனும் முருகப்பெருமான்தான் என்பதை அறிகின்ற அறிவே சிறப்பறிவாகும்.
 
         
								 
								





 
															 
															