News
AUGUST 2025

குரு உபதேசம் 4492
முருகப்பெருமான் திருவடிகளைப் பற்றி பூஜித்து ஆசிபெற்றிட்டால்….
தானத்தில் சிறந்தது அன்னதானமே! அதை செம்மையாக செய்ய கற்றுக்கொண்டவன்தான் ஜென்மத்தைக் கடைத்தேற்றுவான் என்பதை அறியலாம்.
மற்றைய தானங்கள் அனைத்தும் அன்னதானத்தின் பலனைவிட குறைவானதேயாம்.
அன்னதானம் என்பது உடலையும், உயிரையும் மகிழ்விப்பதால் எல்லா தானங்களிலும் சிறந்தது என்றும் ஜீவதயவின் முழு வெளிப்பாடு அன்னதானத்தினில் தான் அடைய முடியும் என்றும் அறியலாம். மற்றைய தானங்கள் வாய்ப்பு உள்ள போது, காலம் தாழ்த்திக்கூட செய்யலாம், ஆனால் மனிதர்களுக்கு பசியாற்றும் பரோபகார செயலான அன்னதானத்தில் ஒருபோதும் காலதாமதம் இருக்கக்கூடாது. காலம் தாழ்த்தி செய்யப்படும் அன்னதானம் ஜீவர்களுக்கு நலிவு உண்டாக்குவதால் வினை சூழும் என்பதையும் அறியலாம்.
கடவுள் சிலருக்கு அவர்களது தேவைக்கு அதிகமாக செல்வத்தை அளித்தான். அது அவர்களது முன்ஜென்ம புண்ணிய பலத்தால் இந்த ஜென்மத்தில் பசித்த ஏழைகளுக்கு பசியாற்றுவித்து மேலும் புண்ணியத்தை பெருக்கி கொள்வதற்காகத்தான் அளிக்கப்பட்டதே அன்றி அவரவர் உழைப்பினாலோ, அவரது திறமையினாலோ வந்தது அல்ல என்பதையும் அவ்வாறு தேவைக்கு அதிகமான பொருளை பொருள் பற்றினால் பின்வரும் சந்ததிக்கு என்று தர்மம் செய்யாது பதுக்கி வைப்பாரேயானால் அந்த பொருள்கள் கடவுளால் பறிக்கப்படும் என்பதையும் அறியலாம்.
……………….
ஏற்றமாம் துன்முகியில் ஈராறு கரம் கொண்டோன்
மாற்றமும் செய்வான் மண்ணுலகம் செழிக்கவே.
