News
AUGUST 2025

குரு உபதேசம் 4501
அகத்தீசனை வணங்கி பூஜித்து ஆசிபெற்றிட்டால்….
தர்மம் செய்வோர் தன்னலமற்று தர்மங்கள் செய்தாலும் தர்மத்தின் வழியில் சென்றவர்க்கு வறுமை ஏற்படாது. அப்படி ஏற்படுமேயானால் அது தர்மம் செய்பவரின் குற்றமல்ல, தர்மம் செய்யும் யுகமான கலியுகத்தின் மக்களின் பாவச்சுமை மிகுந்துள்ளதினால் தர்மம் செய்வோர்க்கும், உலக மக்களின் பாவச்சுமைகள் பற்றுவதாலே அவர்களுக்கு தற்காலிகமாக வறுமை வருகிறது என்றும், தொடர்ந்து தளராது தர்மம் செய்ய செய்ய தர்மம் கலியுகப் பாவத்தை வென்று தலைதூக்கி வளமான வாழ்வைத் தரும் என்பதையும் தர்மத்திற்கு சோதனை வருவதும், அந்த சோதனையின் முடிவில் தர்மம் வென்று தனிப்பெருங்கருணையாய் வெளிப்படும் என்பதையும் தலைவனும் வெளிப்படுவான் என்பதையும் அறியலாம்.
தர்மத்திற்கும், தர்மம் செய்வோர்க்கும், தருமம் செய்வதற்கு உதவி செய்வோர்க்கும் கஷ்டங்கள் வருகிறது என்பது கலியுகத்தின் உச்சநிலையைக் குறிக்கிறது என்பதையும், தர்மம் செய்வோரின் மனவேதனை தலைவனை வெளிப்படுத்தி ஞானயுகத்தினை விரைந்து ஏற்படுத்தி கலியுகம் முடிக்கப்படுவதையும் குறிக்கிறது என்பதையும் அறியலாம்.