News
SEPTEMBER 2025

குரு உபதேசம் 4521
அகத்தீசனை வணங்கி பூஜித்து ஆசி பெற்றிட்டால்….
மும்மலக் கசடை நீக்கினால்தான் காமதேகத்தினில் உள்ள கசடு நீங்கி ஒளிதேகம் பெற முடியும் என்பதும் ஒளி தேகம் பெறவும், மும்மலக் கசடு நீங்கவும், தடையாய் இருப்பது அவரவர் செய்த பாவபுண்ணியங்களே என்பதும், பாவபுண்ணியங்கள் சமமானால்தான் தேகக்கசடை நீக்கும் வாய்ப்பை பெறலாம் என்றும் பாவபுண்ணியங்களை சமன் செய்ய, ஞானிகள் துணையும் ஞானபண்டிதன் முருகன் துணையும் இன்றி ஒருபோதும் முடியாது என்பதும் தெளிவாக உணர்த்தப்படும். ஞானிகள் துணையும், ஞானபண்டிதன் முருகனது துணையும் பெற ஒருவன் பெற்ற பொருளோ, சொத்தோ, ஆட்படையின் வடிவினால் முடியாது என்பதும், மனம் உருகி செய்யும் பூஜையாலும், பிற உயிர்க்கு செய்யும் உபகாரத்தாலும், தயவாலும், கருணையாலும், அன்பாலும், தர்மத்தாலும் மட்டுமே ஞானிகள் துணையையும் முருகன் துணையும் பெற முடியும் என்பதும் தெளிவாக உணர்த்தி முருகனது அருளைப் பெற தூண்டுவார் மகான் அகத்தியர்.