News
OCTOBER 2025

குரு உபதேசம் 4542
அகத்தீசனை வணங்கிட:
பசியுள்ள பிள்ளைகள் தாயிடம் உணவு கேட்டால் தருவாள். ஆயிரம் ஆயிரம் தாயினும் மிக்க தயவுடை தனிப்பெருங்கருணை மிக்க ஞானிகள் திருவடி பணிந்து பத்தினி பெண்டிரும், பக்தர்களும், யோகிகளும், பஞ்சபராரிகளும், பாதிக்கப்பட்டோரும், பண்புள்ளோரும் நலம் பெற வேண்டுகோள் வைத்து, வேண்டுகோளை கேட்டால்தான் தருவான் தனிப்பெருங்கருணையுடைய ஞானிகளெல்லாம். கேட்டால்தான் பெறலாம் என்பதையும் கேட்காவிட்டால் ஞானிகள் எப்படி அருள் செய்ய முடியும். ஆதலினால் இடைவிடாது தனக்காகவும், தன்னை சார்ந்தவர்களுக்காகவும் உலக நன்மைக்காகவும் தொடர்ந்து திருவடி பூஜைகளை செய்ய வேண்டுமென்றும் பூஜையிலே தன்னலமற்று வேண்டுகோளை வைத்து கேட்க, கேட்ட ஞானிகள் மனமிரங்கி அருள் செய்வார்கள் என்பதையும் அறியலாம். உருவமாய் உள்ள தாய் அவளால் முடிந்ததை செய்வாள். அரூப நிலை நிற்கும் ஞானிகளை அழைத்தால்தான் அருள் செய்ய முடியும் என்பதையும் உணர்வான் பக்தன்.
அகத்தீசா அகத்தீசா அகத்தீசா என்றே மனம் உருகி அழைக்க அழைக்க அக்கணமே மகான் அகத்திய பெருமானும் அவர் வழி வழி வந்த நவகோடி சித்தரிஷி கணங்களும் உடன் வந்து அருள் செய்வார்கள் என்பதையும் அறியலாம்.