News
JANUARY 2026
தினம் ஒரு அகவல் 05
5. ஈனமின் றிகபரத் திரண்டின்மேற் பொருளாய்
ஆனலின் றோங்கிய வருட்பெருஞ் ஜோதி
ஈனம் இன்றி இக பரத்தின் இரண்டின் மேற் பொருளாய்
ஆனல் இன்றோங்கிய அருட்பெருஞ்ஜோதி !
ஈனம் – குறைகள் ஈனமின்றி – குறைபாடுகளற்ற
ஆனல் இன்றி – நிகரில்லா
இகம் – இந்தப் பிறவியில் உள்ள இன்ப துன்பங்கள் – நிலையற்றவை
பரம் – முக்தி, மோட்சம் – நிலையானவை
அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர் நிலையற்ற உலக இன்பங்கள் (இகம்), நிலையானதாகக் கருதப்படும் முக்தி இன்பங்கள் (பரம்) ஆகிய இரண்டையும் கடந்து, எல்லாவற்றிற்கும் உயர்ந்த நிலையில் நித்தியமாக நிலைத்திருக்கும் முழுமுதற் பொருளாவார்.


