News
JANUARY 2026
தினம் ஒரு அகவல் 06
6. உரைமனங் கடந்த வொருபெரு வெளிமேல்
அரைசுசெய் தோங்கு மருட்பெருஞ் ஜோதி
உரை மனம் கடந்த ஒரு பெருவெளி மேல்
அரைசு செய்து ஓங்கும் அருட்பெருஞ்ஜோதி !
உரைமனங் கடந்த: உரைக்கும் மொழிகளுக்கும், சிந்திக்கும் மனதிற்கும் அப்பாற்பட்ட இறைவன்.
அரைசுசெய்: ஆட்சி செய்யும்.
ஒப்பற்ற பிரபஞ்சத்தில் ஆட்சி செய்யும் அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர் சொல்லாலும், சிந்தனையாலும் அறிய முடியாதவராவார்.


