News
JANUARY 2026
தினம் ஒரு அகவல் 09
9. ஏறா நிலைமிசை யேற்றியென் றனக்கே
ஆறாறு காட்டிய வருட்பெருஞ் ஜோதி
ஏறா நிலை மிசை ஏற்றி என்றனக்கே
ஆறாறு காட்டிய அருட்பெருஞ்ஜோதி !
மனிதர்களால் ஏற முடியாத உயர்ந்த ஞான நிலையில் என்னை ஏற்றி முப்பத்தாறு தத்துவங்களின் அமைப்பையும் இயக்கத்தையும் எனக்கு தெளிவாக காட்டித் தந்த அருட்பெருஞ்ஜோதியே !
36 தத்துவங்கள்
ஆன்ம தத்துவங்கள் – 24
வித்யா தத்துவங்கள் – 7
சிவ தத்துவங்கள் – 5


