News
MAY 2026
2nd May 2026
தினம் ஒரு அகவல் 228
சாருயிர்க் கெல்லாந் தாரக மாம்பரை
யாருயிர்க் குயிரா மருட்பெருஞ் ஜோதி – 228
சார் உயிர்க்கெல்லாம் தாரகமாம் பரை
ஆருயிர்க்கு உயிராம் அருட்பெருஞ்ஜோதி !
சார்ந்த உயிர்களையெல்லாம் தாங்கி (தாரகம்) ஆதாரமாக விளங்குகின்ற பராசக்தியாகவும், அனைத்து உயிர்களின் உயிராகவும் விளங்குகின்ற அருட்பெருஞ்ஜோதி !


