News
MAY 2026
தினம் ஒரு அகவல் 232
மாய்ந்தவர் மீட்டும் வருநெறி தந்திதை
யாய்ந்திடென் றுரைத்த வருட்பெருஞ் ஜோதி – 232
மாய்ந்தவர் மீட்டும் வரு நெறி தந்து இதை
ஆய்ந்திடு என்றுரைத்த அருட்பெருஞ்ஜோதி !
இறந்து போனவர்களை மீண்டும் உயிர்ப்பித்து எழுந்து வரச் செய்கின்ற (மரணத்தை வெல்லும்) ரகசியமான வழியை (ஞான நெறி) எனக்கு அளித்து, “இதை நீயே ஆராய்ந்து அறிந்து கொள்” என்று உபதேசித்து அருளிய அருட்பெருஞ்ஜோதியே!


