News
MAY 2026
தினம் ஒரு அகவல் 250
முத்தியென் பதுநிலை முன்னுறு சாதனம்
அத்தக வென்றவென் னருட்பெருஞ் ஜோதி – 250
முத்தி என்பது நிலை முன்னுறு சாதனம்
அத்தக என்ற என் அருட்பெருஞ்ஜோதி !
முத்தி என்பது நாம் அடைய வேண்டிய இறுதி இலக்கு அல்ல; அது, உலக நன்மைக்காக சித்திகளைச் செய்வதற்கான தகுதியைப் பெற, நாம் முன்னரே அடைய வேண்டிய ஒரு சாதனம் (நெறி) மட்டுமே என்று எனக்குத் தெளிவாக உணர்த்திய அருட்பெருஞ்ஜோதியே!


