News
MAY 2026
22nd May 2026
தினம் ஒரு அகவல் 264
ஜோதியுட் ஜோதியின் சொருபமே யந்த
மாதியென் றருளிய வருட்பெருஞ் ஜோதி – 264
ஜோதியுள் ஜோதியின் சொருபமே அந்தம்
ஆதி என்றருளிய அருட்பெருஞ்ஜோதி !
அண்டங்களின் ஒளியிலும் உயிர்களின் ஒளியிலும் உள்ள நித்திய பேரொளியின் வடிவமும், அந்த வடிவமே எல்லாப் படைப்புகளுக்கும் மூலமான ஆதியும் ஆகும் என்று உபதேசித்து அருளிய அருட்பெருஞ்ஜோதியே!


