News
MAY 2026
தினம் ஒரு அகவல் 266
இந்தசிற் ஜோதியி னியலுரு வாதி
யந்தமென் றருளிய வருட்பெருஞ் ஜோதி – 266
இந்த சித்ஜோதியின் இயல் உரு ஆதி
அந்தம் என்று அருளிய அருட்பெருஞ்ஜோதி !
ஞான பிரகாசத்தின் அறிவு வடிவான பேரொளியின் உண்மையான சொரூபமே, உலகங்கள் அனைத்தின் படைப்புக்கு மூலமான தொடக்கமும் (ஆதியும்), அழிவுக்கு (இறுதி முடிவும்) ஆகும் என்று உபதேசித்து அருளிய அருட்பெருஞ்ஜோதியே!


