News
MAY 2026
24th May 2026
தினம் ஒரு அகவல் 268
ஆதியு மந்தமு மறிந்தனை நீயே
ஆதியென் றருளிய வருட்பெருஞ் ஜோதி – 268
ஆதியும் அந்தமும் அறிந்த எனை நீயே
ஆதி என்று அருளிய அருட்பெருஞ்ஜோதி !
மும்மூர்த்திகளால் கூட அறிய முடியாத அடி முடியை (ஆதி, அந்தம்) ஞானத்தால் பெற்ற நீயே இந்த பிரபஞ்சத்தின் மூலாதார (ஆதி) சக்தியாவாய் என்று அருளிய அருட்பெருஞ்ஜோதி !


