News
MAY 2026
தினம் ஒரு அகவல் 282
ஆரிய லகம்புற மகப்புறம் புறப்புறம்
ஆரமு தெனக்கரு ளருட்பெருஞ் ஜோதி – 282
ஆரியல் அகம்புறம் அகப்புறம் புறப்புறம்
ஆரமுது எனக்கருள் அருட்பெருஞ்ஜோதி !
ஆரியல் – மேலான தன்மை அகம் – ஆன்ம ஞானம்,
புறம் – உடல், அகப்புறம் – காரண உடல்,
புறப்புறம் – அண்டம்
உன்னதமான நிலையில் வீற்றிருந்து, என்னுடைய உள்ளம், உடல், உள்-உணர்வு, அண்டம் ஆகிய எல்லா நிலைகளிலும் அரிய அமிர்தமாக (அழிவில்லாத இன்பமாக) நிறைந்து எனக்கு அருள் செய்த அருட்பெருஞ்ஜோதியே!


