News
JUNE 2026
17th June 2026
தினம் ஒரு அகவல் 316
மருட்பகை தவிர்த்தெனை வாழ்வித் தெனக்கே
யருட்குரு வாகிய வருட்பெருஞ் ஜோதி – 316
மருட் பகை தவிர்த்து எனை வாழ்வித்து எனக்கே
அருட்குருவாகிய அருட்பெருஞ்ஜோதி !
மாயை (மருள்) என்னும் பகையை என்னிடமிருந்து நீக்கி, என்னை நித்திய வாழ்வு வாழச் செய்து, எனக்கே அருளை உபதேசித்து ஞானகுருவாக மாறி வந்த அருட்பெருஞ்ஜோதியே!


