News
FEBRUARY 2026
தினம் ஒரு அகவல் 36
36. சாக்கிரா தீதத் தனிவெளி யாய்நிறை
வாக்கிய சிற்சபை யருட்பெருஞ் ஜோதி
சாக்கிரஅதீதத் தனிவெளியாய் நிறைவு
ஆக்கிய சிற்சபை அருட்பெருஞ்ஜோதி !
சாக்கிரம், சொப்பனம், சுழுத்தி போன்ற ஐம்புலன்களின் அனுபவங்களையும் துரியம், துரியாதீதம் போன்ற யோக நிலைகளையும் கடந்து தனியான பேரறிவாகிய வெளியாய் எங்கும் நிறைந்து, எல்லோராலும் புகழப்படும் சிற்சபையில் வீற்றிருக்கும் அருட்பெருஞ்ஜோதியே!


