News
JULY 2026
தினம் ஒரு அகவல் 390
மண்கணச் சத்திகள் வகைபல பலவும்
அண்கொள வமைத்த வருட்பெருஞ் ஜோதி – 390
மண் கணச் சத்திகள் வகை பல பலவும்
அண்கொள அமைத்த அருட்பெருஞ்ஜோதி !
பூமிக்குரிய, எண்ணற்ற வகையிலுள்ள பலதரப்பட்ட சக்திகள் (தாதுக்கள், உயிர்ச்சத்துக்கள், மூலக்கூறு ஆற்றல்கள்) உயிர்கள் அனைத்தோடும் நெருங்கித் தொடர்பு கொள்ளும்படி அமைத்து அருளிய அருட்பெருஞ்ஜோதியே!


