News
JULY 2026
தினம் ஒரு அகவல் 392
மண்ணிலைச் சத்தர்கள் வகைபல பலவும்
அண்ணுற வமைத்த வருட்பெருஞ் ஜோதி – 392
மண் நிலைச் சத்தர்கள் வகை பல பலவும்
அண்ணுற அமைத்த அருட்பெருஞ்ஜோதி !
நிலமாகிய பூதத்தில் நிலைப்பெற்று, அதனை இயக்கவும் நிலைப்படுத்தவும் செய்யும் பலதரப்பட்ட இறைச் சக்திகளையும் (சத்தர்களையும்) அவற்றின் பிரிவுகளையும் அவற்றின் இயல்புக்கேற்பப் பொருந்தும்படிச் செய்தருளிய பேரருள் வடிவமே அருட்பெருஞ்ஜோதி.


