News
JULY 2026
தினம் ஒரு அகவல் 396
மண்ணினிற் பொருள்பல வகைவிரி வெவ்வே
றண்ணுறப் புரிந்த வருட்பெருஞ் ஜோதி – 396
மண்ணினில் பொருள் பலவகை விரி வெவ்வேறு
அண்ணுறப் புரிந்த அருட்பெருஞ்ஜோதி !
நிலத்தில் பலவிதமான பொருள்களும், அவற்றின் பிரிவுகளும், விரிவுகளும் அவற்றின் இயல்புகளுக்கேற்பச் சரியாகப் பொருந்தும்படிச் செய்து உலகைப் படைத்தருளிய பேரருள் வடிவமே அருட்பெருஞ்ஜோதி.


