News
FEBRUARY 2026
17th February 2026
தினம் ஒரு அகவல் 40
40. சேகர மாம்பல சித்தி நிலைக்கெலாம்
ஆகர மாஞ்சபை யருட்பெருஞ் ஜோதி
சேகரமாம் பல சித்தி நிலைக்கெலாம்
ஆகரமாம் சபை அருட்பெருஞ்ஜோதி !
திரண்டுள்ள பலவிதமான சித்தி நிலைகள் மற்றும் அரிய சக்திகள் ஆகிய அனைத்திற்கும் மூல இருப்பிடமாக, ஊற்றுக் கண்ணாக விளங்கும் சபையில் வீற்றிருக்கும் அருட்பெருஞ்ஜோதியே!


