News
AUGUST 2026
தினம் ஒரு அகவல் 404
நீரினிற் றண்மையும் நிகழூ ரொழுக்கமும்
ஆருற வகுத்த வருட்பெருஞ் ஜோதி – 404
நீரினில் தண்மையும் நிகழ்ஊ ரொழுக்கமும்
ஆர்உற வகுத்த அருட்பெருஞ்ஜோதி
தண் – குளிர்ச்சி
நீரின் இயல்பான குளிர்ச்சிப் பண்பையும், அது பாயும் ஒழுங்கான ஓட்டத்தையும் (இயக்கத்தையும்) உலக உயிர்கள் இன்புற்று வாழும்படி முறையாகப் பகுத்து அமைத்த அருட்பெருஞ்ஜோதியே!


