News
AUGUST 2026
10th August 2026
தினம் ஒரு அகவல் 422
நீரினிற் சத்தர்க ணிறைவகை யுறைவகை
ஆர்தரப் புரிந்த வருட்பெருஞ் ஜோதி – 422
நீரினில் சத்தர்கள் நிறைவகை உறைவகை
ஆர்தரப் புரிந்த அருட்பெருஞ்ஜோதி
நீர் என்னும் பூதத்தில் பலவிதமான சக்திகளின் வடிவங்கள் நிரம்பி நிலைபெற்று இருக்கும் வகைகளை அமைத்து, அதன் மூலம் உலக உயிர்கள் இன்பம் அடையும்படி செய்தருளிய அருட்பெருஞ்ஜோதியே!


