News
AUGUST 2026
தினம் ஒரு அகவல் 430
நீரியல் பலபல நிரைத்ததிற் பிறவும்
ஆர்தரப் புரிந்த வருட்பெருஞ் ஜோதி – 430
நீர்இயல் பலபல நிறைத்து அதில் பிறவும்
ஆர்தரப் புரிந்த அருட்பெருஞ்ஜோதி
நீருக்குள்ளேயே பலவிதமான இயல்புகளை முறையாக நிலைபெறச் செய்து, அதனோடு இணைந்த மற்ற பொருட்களையும் (பிறவற்றையும்) அமைத்து, அவை உயிர்களுக்கு நிறைவைத் தரும் வகையில் அமைத்த அருட்பெருஞ்ஜோதி !


