News
FEBRUARY 2026
தினம் ஒரு அகவல் 45
45. கற்பம் பலபல கழியினு மழிவுறா
அற்புதந் தருஞ்சபை யருட்பெருஞ் ஜோதி
கற்பம் பலபல கழியினும் அழிவுறா
அற்புதம் தரும் சபை அருட்பெருஞ்ஜோதி !
கற்பம் – யுகம்
பல யுகங்கள் கடந்து, அவை முடிந்து போனாலும் கூட, எந்தக் காலத்திலும் அழிவுறாமல் இருக்கின்றவரும், தன்னுடைய அடியார்களுக்கு அற்புதங்களை அருளாசியாக அள்ளி வழங்குகின்ற சபையில் வீற்றிருக்கும் அருட்பெருஞ்ஜோதியே!


