News
SEPTEMBER 2026
தினம் ஒரு அகவல் 470
காற்றிடை யீரியல் காட்டி யதிற்பல
ஆற்றவும் வகுத்த வருட்பெருஞ் ஜோதி – 470
காற்றிடை ஈரியல் காட்டி அதில்பல
ஆற்றவும் வகுத்த அருட்பெருஞ்ஜோதி
காற்றின் இயல்பான இருநிலைகளான வெப்பம் மற்றும் குளிர்ச்சி நிலைகளை அமைத்து அதன் விளைவாக பல இயக்கங்களை நடத்த வகை செய்த அருட்பெருஞ்ஜோதி. தவத்தின் மூலமே இருநிலைகளாக மூச்சுக்காற்றினை இயக்குவதே ஆகும்.


