News
SEPTEMBER 2026
தினம் ஒரு அகவல் 476
காற்றிடைச் சத்திகள் கணக்கில வுலப்பில
ஆற்றவு மமைத்த வருட்பெருஞ் ஜோதி – 476
காற்றிடைச் சத்திகள் கணக்கில உலப்பில
ஆற்றவும் அமைத்த அருட்பெருஞ்ஜோதி
காற்று என்னும் பூதத்தின் அளவற்ற (கணக்கில), அழியாத சக்திகள் (உலப்பில) அனைத்தையும் ஆளுமை செய்து, அவற்றின் மூலமாக உலக இயக்கத்தை மிகுந்த வல்லமையுடன் நிலைபெறச் செய்த அருட்பெருஞ்ஜோதி !


