News
FEBRUARY 2026
27th February 2026
தினம் ஒரு அகவல் 50
50. எச்சபை பொதுவென வியம்பின ரறிஞர்கள்
அச்சபை யிடங்கொளு மருட்பெருஞ் ஜோதி
எச்சபை பொது என இயம்பினர் அறிஞர்கள்
அச்சபை இடம் கொளும் அருட்பெருஞ்ஜோதி !
எந்தச் சபையை (பிரபஞ்சம்) யாவருக்கும் பொதுவானது என்று ஞானிகள் வரையறுத்துச் சொன்னார்களோ, அந்தச் சபையையே நிரந்தர இருப்பிடமாகக் கொண்டுள்ள அருட்பெருஞ்ஜோதியே!


