தினம் ஒரு அகவல் 56
56. எம்மையு மென்னைவிட் டிறையும் பிரியா
தம்மையப் பனுமா மருட்பெருஞ் ஜோதி
எம்மையும் என்னை விட்டு இறையும் பிரியாது
அம்மை அப்பனுமாம் அருட்பெருஞ்ஜோதி !
என்னையும், என்னை விட்டு இறை சிந்தனை சிறிதும் பிரியாமல் காப்பாற்றும் எனது தாய் தந்தை போன்ற அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரே !