News
NOVEMBER 2026
தினம் ஒரு அகவல் 586
காவல்செய் தலைவரைக் காவலண் டங்களை
ஆவகை யமைத்த வருட்பெருஞ் ஜோதி – 586
காவல்செய் தலைவரைக் காவல் அண்டங்களை
ஆவகை அமைத்த அருட்பெருஞ்ஜோதி
ஆவகை – அந்தந்த வகையில்
உயிர்களைக் காக்கும் தொழிலைச் செய்யும் தலைவர்களையும், அவர்கள் அந்தப் பணியைச் செய்வதற்குரிய அண்டங்களையும், அந்தந்த முறைப்படி நேர்த்தியாக அமைத்துக் கொடுத்த அருட்பெருஞ்ஜோதி !


