News
MARCH 2026
தினம் ஒரு அகவல் 60
60. உனுமுணர் வுணர்வா யுணர்வெலாங் கடந்த
அநுபவா தீத வருட்பெருஞ் ஜோதி
உனும் உணர்வு உணர்வாய் உணர்வெலாம் கடந்த
அநுபவா தீத அருட்பெருஞ்ஜோதி !
உனும் உணர்வு – உள்ளறிவு
உள்ளறிவுக்குள் (உனுமுணர்வு) உணர்வாக இருந்து, உலகியல் மற்றும் ஆன்மீக அறிவுகள் அனைத்தையும் தாண்டி, நேரடியாக உணரும் அனுபவத்தின் எல்லைகளுக்கும்கூட அப்பாற்பட்டவராய் விளங்குகின்ற அருட்பெருஞ்ஜோதியே!


