News
NOVEMBER 2026
தினம் ஒரு அகவல் 606
எண்ணில்பல் சத்தியை யெண்ணிலண் டங்களை
அண்ணுற வகுத்த வருட்பெருஞ் ஜோதி – 606
எண்ணில் பல் சத்தியை எண்ணில் அண்டங்களை
அண்ணுற வகுத்த அருட்பெருஞ்ஜோதி !
அண்ணுதல் – நெருங்குதல் / பொருந்துதல்
எண்ணிக்கையற்ற பலவிதமான சக்திகளையும், கணக்கிலடங்காத அண்டங்களையும், அவை ஒன்றுடன் ஒன்று மிக நெருக்கமாகப் பொருந்திச் செயல்படும் வண்ணம் முறையாக வகுத்துக் கொடுத்த அருட்பெருஞ்ஜோதி !


