News
NOVEMBER 2026
தினம் ஒரு அகவல் 608
அளவில்பல் சத்தரை யளவி லண்டங்களை
அளவற வகுத்த வருட்பெருஞ் ஜோதி – 608
அளவில் பல் சத்தரை அளவில் அண்டங்களை
அளவற வகுத்த அருட்பெருஞ்ஜோதி !
சக்தி என்பது ஆற்றல். சத்தர் என்பது அந்த ஆற்றலை தாங்கி இயக்கும் தலைவர் என்று பொருள்படும். எண்ணிக்கையற்ற ஆற்றல் மிக்க தலைவர்களையும், எல்லையே இல்லாத பல அண்டங்களையும், அவை அனைத்தும் ஒரு பெரும் ஒழுங்குடன் இயங்கும் வண்ணம் அளவில்லாத மேன்மையுடன் வகுத்துக் கொடுத்த அருட்பெருஞ்ஜோதி !


