News
MARCH 2026
தினம் ஒரு அகவல் 62
62. உளவினி லறிந்தா லொழியமற் றளக்கின்
அளவினி லளவா வருட்பெருஞ் ஜோதி
உளவினில் அறிந்தால் ஒழிய மற்று அளக்கின்
அளவினில் அளவா அருட்பெருஞ்ஜோதி !
உளவு – சூட்சுமம் / இரகசியம்
இறைவனை உள்ளத்தில் உணரும் சூட்சும வழியால் மட்டுமே அறிய முடியுமே தவிர, உலகில் உள்ள எந்த அளவுகோல்களைக் கொண்டு அளக்க முயன்றாலும், அவன் அளந்து அறிய முடியாத எல்லையற்ற பொருளாகவே விளங்குவான். அத்தகைய அருட்பெருஞ்ஜோதியே!


