News
NOVEMBER 2026
28th November 2026
தினம் ஒரு அகவல் 626
நூற்றிடை யிலக்க நுவலதி லனந்தம்
ஆற்றிடை வகுத்த வருட்பெருஞ் ஜோதி – 626
நூற்றிடை இலக்கம் நுவலதில் அனந்தம்
ஆற்றிடை வகுத்த அருட்பெருஞ்ஜோதி !
நூறுகளில் தொடங்கி பல இலக்கங்கள் கொண்ட லட்சங்களையும், அதில் எண்ணிலடங்கா (அனந்தம்) பிரிவுகளையும் உண்டாக்கி அவை அனைத்தையும் முறையாக அமைத்த அருட்பெருஞ்ஜோதி !


