News
MARCH 2026
தினம் ஒரு அகவல் 68
68. மதனுற்ற வண்ட வரைப்பினெங் கெங்கும்
அதனுக் கதுவா மருட்பெருஞ் ஜோதி
மதன் உற்ற அண்ட வரைப்பின் எங்கெங்கும்
அதனுக்கு அதுவாம் அருட்பெருஞ்ஜோதி !
ஆண்பாலாகவும், பெண்பாலாகவும் பிரபஞ்ச சக்தியைக் குறிப்பிட்ட வள்ளல் பெருமான் அந்த சக்தியை அஃறிணையாகவும் குறிப்பிடுகிறார்கள்.
ஆற்றலும் சக்தியும் நிறைந்த இந்தப் பிரபஞ்சத்தின் எல்லைக்குட்பட்ட எல்லா இடங்களிலும், ஒவ்வொரு அஃறிணைப் பொருளுக்கும் (உயிர் அல்லாத சடப் பொருளுக்கும்) அதன் உண்மை வடிவமாகவே விளங்குகின்ற அருட்பெருஞ்ஜோதியே!


