News
MARCH 2026
தினம் ஒரு அகவல் 73
73. சத்தர்க ளெல்லாந் தழைத்திட வகம்புறத்
தத்திசை விளங்கு மருட்பெருஞ் ஜோதி
சத்தர்கள் எல்லாம் தழைத்திட அகம் புறத்து
அத்திசை விளங்கும் அருட்பெருஞ்ஜோதி !
சத்தர்கள் – உண்மைப் பொருளை அறிந்த ஞானிகள்.
உண்மையைக் கண்டறிந்த ஞானிகள் அனைவரும் (சத்தர்கள்) ஆன்மீகத்தால் செழித்து வாழும்பொருட்டு, உள்ளம், உலகம் மற்றும் எல்லாத் திசைகளிலும் நீக்கமற நிறைந்து பிரகாசிக்கின்ற அருட்பெருஞ்ஜோதியே!


