News
MARCH 2026
25th March 2026
தினம் ஒரு அகவல் 76
76. பெரிதினும் பெரிதாய்ச் சிறிதினுஞ் சிறிதாய்
அரிதினு மரிதா மருட்பெருஞ் ஜோதி
பெரிதினும் பெரிதாய்ச் சிறிதினும் சிறிதாய்
அரிதினும் அரிதாம் அருட்பெருஞ்ஜோதி !
பெரியதிலும் பெரியதாகவும், சிறியதிலும் சிறியதாகவும் இருந்து, அடைவதற்கு அரிதான பொருள்களைக் காட்டிலும் மேலான, மிகமிக அரிதாய் விளங்குகின்ற அருட்பெருஞ்ஜோதியே!


