News
MARCH 2026
தினம் ஒரு அகவல் 79
79. இறவா வரமளித் தென்னைமே லேற்றிய
அறவாழி யாந்தனி யருட்பெருஞ் ஜோதி
இறவா வரம் அளித்து என்னை மேலேற்றிய
அறவாழியாம் தனி அருட்பெருஞ்ஜோதி !
அறவாழி (அறம் + ஆழி) – அறக்கடல்
பிறப்பு, இறப்பு என்னும் சுழற்சியிலிருந்து விடுபட்டு, சாகாவரம் அளித்து, என்னையும் உயர்ந்த ஞான நிலைக்கு உயர்த்தியருளியவரும், தனிச் சிறப்பு வாய்ந்த அறக் கடலாகவே (அறவாழி) விளங்குகின்ற அருட்பெருஞ்ஜோதியே!


