News
MARCH 2026
தினம் ஒரு அகவல் 81
81. எண்ணிய வெண்ணியாங் கியற்றுக வென்றெனை
யண்ணியுள் ளோங்கு மருட்பெருஞ் ஜோதி
எண்ணிய எண்ணியாங்கு இயற்றுக என்று எனை
அண்ணி உள் ஓங்கும் அருட்பெருஞ்ஜோதி !
மனத்தில் நினைத்த எல்லாவற்றையும், நினைத்தபடியே செய்து முடிப்பாய் என்று எனக்கு ஆணையிட்டு, என்னை நெருங்கி (அண்ணி) வந்து என் உள்ளத்திலேயே உயர்ந்து பிரகாசமாக விளங்குகின்ற அருட்பெருஞ்ஜோதியே!


